கரூர் விவகாரத்தில் அஜித்குமார் சொன்ன கருத்து அவருடைய சொந்த கருத்து அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 2 நவம்பர் (ஹி.ச) எம்ஆா்டி1 நடத்தும் சாா்ஜ்பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டியை சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதன்பிறகு செய்தியாளர்களை துணை முதலமைச்சர் சந்தித்த உதயந
Udhay


சென்னை, 2 நவம்பர் (ஹி.ச)

எம்ஆா்டி1 நடத்தும் சாா்ஜ்பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டியை சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களை துணை முதலமைச்சர் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

சி.பி.ஐ.விசாரணை நடைபெற்று வருகிறது அதனால் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை.பீகாரில் தேர்தல் ஆணையம் என்ன செய்திருக்கிறது என்பதனை வெளிச்சம் போட்டு பத்திரிகையாளர்கள் காண்பித்துள்ளனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று கூட உள்ளது, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

எங்கெங்கு தேர்தல் நடக்கிறதோ ஒன்றிய பாஜக அரசுக்கு எது எது சாதகமாக உள்ளதோ அதனை வைத்துக்கொண்டு, பாதகமாக இருக்கக்கூடிய வாக்குகளை நீக்கக்கூடிய வேலைகளில் வெளிப்படையாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக வெல்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதே இல்லை, மக்கள் அந்த வாய்ப்பினை கொடுப்பதே இல்லை, எனவே இதனைப் பயன்படுத்தி வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட பார்க்கிறார்கள்

செங்கோட்டையன் நீக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,

இதில் நான் கருத்து சொல்ல முடியாது, இந்த காரணத்திற்காக தான் நான் ஏற்கனவே சொன்னேன்

அவர் நிரந்தர பொது செயலாளராக இருக்க வேண்டும் என்று.

பருவமழை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இந்த ஆண்டு பருவ மழை எதிர்கொள்ள பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது.

மழை தற்பொழுது இல்லாமல் உள்ள நிலையில் சாலைகளில் பேட்ச் ஒர்க் நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை நகராட்சி மாநகராட்சி உள்ளிட்ட துறைகள் களத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.இன்னும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் நிறைய குறைகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.

பொது மக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படுகிறது,அரசு சார்பில் வேலைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது, பொதுமக்களும் அவர்களுடைய ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு,

சம்பந்தப்பட்ட அமைச்சர் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார், இதனை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம்.

கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர்,

இது குறித்து ஏற்கனவே முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார், கரூர் சம்பவத்திற்கு உண்மையாக யார் பேட்டி கொடுக்க வேண்டுமோ அவரை ஊடகங்கள் இன்னும் பேட்டி எடுக்கவில்லை, அவர் பேட்டி கொடுக்க விரும்பவில்லையா என்று தெரியவில்லை.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது அதனால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

நடிகர் அஜித்குமாரின் கருத்து அவருடைய சொந்த கருத்து அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை, அவர் எது கூறினாலும் அது பாராட்டுத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ