Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 2 நவம்பர் (ஹி.ச.)
கோவை, பீளமேடு துரைசாமி லே - அவுட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது கஞ்சா மற்றும் போக்சோ குற்ற வழக்குகள் இருந்தது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கார்த்திகை உறவினரான தர்மராஜ் ஜாமினில் எடுத்து வெளியே கொண்டு வந்தார்.
இதை அடுத்து தர்மராஜ் கார்த்திக்கிடம் இனிமேல் திருந்தி வாழ வேண்டும் என்றும் பொது இடத்தில் வைத்து பலர் முன்னிலையில் அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனது விருப்பப்படி தான் இருப்பேன் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் மதுபாட்டில் எடுத்து உடைத்து தர்மராஜை குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே கார்த்திக்கின் பாட்டி கண்ணியம்மாள் தலையிட்டு தடுத்தார். மேலும் கார்த்திக்கிடம் அங்கு இருந்து செல்லாவிட்டால் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமனித கார்த்திக் கண்ணியமாளை மது பாட்டிலால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கண்ணியம்மாள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் பீளமேடு காவல் துறை வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Hindusthan Samachar / V.srini Vasan