Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 2 நவம்பர் (ஹி.ச)
நடிகரும், ரேசருமான அஜித்குமார் சமீபத்தில் தனியார் பத்திரிகை நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில் தன்னுடைய வாழ்க்கை ரேஸ் சினிமா ரசிகர்கள் என்ற பல விதமான கருத்துக்களை முன்வைத்து பேசி இருந்தார்.
அந்த கருத்துக்கள் இணையத்தில் மிகவும் பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த நேர்காணல் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
அஜித்குமார் அவர்களின் முழு நேர்காணலை பார்த்தேன். பல ஆண்டுகளாக அவரை கவனித்து வருகிறேன். எப்போதும் இயல்பான, பணிவான ,மனதில் பட்டதைப் பேசுகிற நேர்மையான மனிதராகவே தெரிகிறார்.
ரசிகர்களின் நடத்தை, ஊடகங்களின் அணுகுமுறை மற்றும் அதன் சமூக விளைவுகள், சமூகமாக நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தேவை குறித்து அவர் பகிர்ந்த எண்ணங்கள் ஆழமானவை.
அவை பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். அவர் மீண்டும் மீண்டும் கூறியபடி, அவை சரியான மனப்பாங்குடன் எடுத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்.
வசதியான வாழ்க்கையைத் தாண்டி,புதிய சாதனைகளை நிகழ்த்த தன்னை தயார்செய்துகொள்வது எளிதல்ல.
வாழ்க்கை மற்றும் வெற்றி குறித்த அவருடைய ஆழமான புரிதல் மகிழ்ச்சியளிக்கிறது.
அவருடைய கார் ரேசிங் பயணம் வெற்றியடைய நல்வாழ்த்துகள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ