Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 2 நவம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பிரமாண்ட அரங்கத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60 ஆவது மணிவிழா மாநாடு இன்று துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா மகனும் திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
ஜகம் நீ ஜனனி என்ற பாடலுடன் துவங்கி பக்தி பாடல்கள், பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் போன்ற உருக்கமான திரைப்படப் பாடல்களை பாடி அனைவரையும் தனது இசையால் கட்டுவித்தார்.
இன்னிசை கச்சேரியை நிறைவு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கூறுகையில்,
தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் இசையமைப்பது எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்பதால் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இசை நிகழ்ச்சியை முழுமையாக அமர்ந்து பார்த்து ரசித்து நன்றாக உள்ளது என்றது வாய்ப்பு மட்டுமல்ல ஆசிர்வாதமாக கருதுகிறேன்.
தருமபுரம் ஆதீனத்தின் இசை புலவர் என்ற விருது வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். இதற்கு முன்பு இந்த விருதை 26 ஆவது குருமகா சன்னிதானம் கே.ஜே யேசுதாஸ்சுக்கு வழங்கி உள்ளதாக ஆதீன புலவர் குறிப்பிட்டபோது இடைமறித்து பேசிய கார்த்திக் ராஜா அவர் பெற்ற விருது பின்னர் நான் வாங்கும் போது ரொம்ப சின்னவனாக தெரிகிறேன்.
தருமபுரம் ஆதீனம் இருந்ததால் சுவாரசியமான பாடல்கள் பாடவில்லை. நீங்கள் கேட்டிருந்தால் கூட ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா என்ற பாடலை கூட பாடியிருப்பேன் ஆனால் அதற்கான இடம் இது இல்லை, பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் என்ற பாடலை பாடிய போது தருமபுரம் ஆதீனம் ரசித்து கேட்டது எனக்கு பெருமையாக இருந்தது என்றார்.
Hindusthan Samachar / Durai.J