Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 2 நவம்பர் (ஹி.ச.)
ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதன்படி இன்று (2-ந்தேதி) அவர் உத்தரகாண்ட் செல்ல உள்ளார் என ஜனாதிபதி அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பயணத்தின் முதல் நாளில், அரித்துவாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து வரும் 3-ந்தேதி, உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் ஜனாதிபதி சிறப்பு உரையாற்ற உள்ளார். அதே நாளில், நைனிடால் ராஜ்பவனின் 125-வது ஆண்டு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து வரும் 4-ந்தேதி, கைஞ்சி தாம் பகுதியில் உள்ள நீம் கரோலி பாபா ஆசிரத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார்.
பின்னர் நைனிடாலில் உள்ள குமான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு ஜனாதிபதி டெல்லி திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM