Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 2 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எல்லை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர், அவரது உறவுக்கார பெண்ணான 15 வயது மதிக்கத்தக்க 11 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த தகவல் ரஞ்சித் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதில் மனம் உடைந்த மாணவி வீட்டின் தனி அறையில் தூக்கிட்டு நிலையில் சடலமாக இருந்தார்.
இது குறித்து மாணவியன் பெற்றோர் உடனடியாக எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மாணவியை ரஞ்சித் மற்றும் அவரது பெற்றோர்கள் கொலை செய்து வீட்டில் தூக்கு போட்டு இருக்கலாம் எனவும் சந்தேகப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து தொடர்ந்து போலீசார்ருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN