Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 2 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள்.
ஒவ்வொரு மாதமும் பவுணர்மி தினத்தில் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக இந்த தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதே போல ஒவ்வொரு ஆண்டும் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
அந்த வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை
(டிசம்பர் 3ம் தேதி) கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மறுநாள் பவுர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைகு சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தீபத் திருவிழாவிற்காக பக்தர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது குறித்து போக்குவரத்து துறையினருடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது, தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும், வட்டார போக்குவரத்து துறை மூலம் திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM