இராஜபாளையத்தில் ஏழைகளின் மருத்துவராக செயல்பட்ட மருத்துவர் ராஜசேகர் காலமானார் - பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மௌன ஊர்வலம்
இராஜபாளையம், 2 நவம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கோபாலகிருஷ்ணன் கிளினிக் என்ற பெயரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார். ஆரம்ப காலத்தில் 20 ரூபாய்க்கு மக்களுக்கு வைத்தியம் பார்த
ஊர்வலம்


இராஜபாளையம், 2 நவம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கோபாலகிருஷ்ணன் கிளினிக் என்ற பெயரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார்.

ஆரம்ப காலத்தில் 20 ரூபாய்க்கு மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு பின்பு அவரது தம்பி மருத்துவர் ராஜசேகர் என்ற கண்ணன் இந்த மருத்துவமனையை நடத்தி வந்தார் 20 ரூபாயில் ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்த்து தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக 50 ரூபாய்க்கு தன்னை நாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்த்து ஐம்பது ரூபாயில் ஊசியும் போட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தார் .

இராஜபாளையம் மற்றும் இராஜபாளையத்தை சுற்றி கிராம பகுதி ஏழை எளிய மக்கள் இவரை நாடி வந்து வைத்தியம் பார்த்து செல்வார்கள் ஏழை எளிய மக்களின் நலனின் அக்கறையோடு செயல்பட்ட மருத்துவர் ராஜசேகர் என்ற கண்ணன் 27.10.2025 இரவு வரை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து இரவு வீட்டுக்கு சென்றவர் உணவு அருந்தி விட்டு படுத்தவர் 28.10.2025 அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

இந்த செய்தி கேட்டு இராஜபாளையம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி .அதிமுக தெற்கு நகர செயலாளர் பரமசிவம்.திமுக சார்பில் சீர்மறவினர் வாரிய துணைத் ராஜா அருண்மொழி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் .மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜவகர் மைதானத்தில் இருந்து மருத்துவர் ராஜசேகர் இல்லம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் மௌன ஊர்வலமாக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Hindusthan Samachar / Durai.J