இரட்டை அக்ரஹாரத்தில் மகளிர் பக்த குழு சார்பாக உலக மற்றும் ஊர் நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்ரை
மதுரை, 2 நவம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக நன்மை மற்றும் ஊர் நன்மை வேண்டியும் மண்வளம் சிறக்க மழை வளம் சிறக்க வேண்டியும் கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது. ஐப்பசி அமாவாசை அடுத்த அதாவது தீபாவளி மறுநாள் அன்று மண் எடுத
நிகழ்ச்சி


மதுரை, 2 நவம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக நன்மை மற்றும் ஊர் நன்மை வேண்டியும் மண்வளம் சிறக்க மழை வளம் சிறக்க வேண்டியும் கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.

ஐப்பசி அமாவாசை அடுத்த அதாவது தீபாவளி மறுநாள் அன்று மண் எடுத்து பசுவும் கன்றும் செய்து அதற்கு முன்பாக தினந்தோறும் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்தாவது நாள் நிறைவாக இரட்டை அக்ரஹார மகளிர் குழு சார்பாக நடைபெற்ற கோலாட்ட நிகழ்ச்சியில் இளம் சிறுவனை கிருஷ்ணனாக பாவித்து முன் செல்ல கோலாட்ட நிகழ்ச்சி பாடலுடன் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட இரட்டை அக்ரஹார மகளிர் குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கோலாட்ட நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்ந்து முளைப்பாரி கரைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது.

Hindusthan Samachar / Durai.J