Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
கடந்த சில நாட்களாக பல்வேறு இண்டிகோ பயணிகள் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்ட ன. இந்நிலையில் விமானிகள் பற்றாக்குறையால் சென்னை விமான நிலையத்தில் 8வது நாளாக இன்றும் (டிச 09) இண்டிகோ விமானச் சேவையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 23 விமானங்களும் , சென்னை விமான நிலையயத்திற்கு வருகை தர வேண்டிய 18 விமானங்கள் என 41 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மும்பை, பாட்னா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொச்சி, பெங்களூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்ம் சென்னைக்கும் இடையேயான விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து பயணக் கட்டணத்தைப் பயணிகள் திரும்பப் பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு இண்டிகோ விமான நிறுவன கவுன்ட்டர்களில் பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் நாளை மறுநாள் (டிச 11) முதல் படிப்படியாக விமானச் சேவையானது அதிக அளவில் கூடுதலாக இயக்கப்படும் என்றும், வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்படும் எனவும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b