Enter your Email Address to subscribe to our newsletters

ஆமதாபாத், 9 டிசம்பர் (ஹி.ச.)
குஜராத்தில் பல்வேறு அரசு திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அமைச்சர் அமித் ஷா பேசியதாவது;
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முதற்கொண்டு தற்போது வரை பாஜ தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் 3வது முறையாக மோடி பிரதமர் ஆனார். பல ஆண்டுகளுக்கு பின் நிகழ்த்தப்பட்ட சாதனை இது.
அனைத்துத் துறைகளிலும் நம் நாடு வளர்ச்சி கண்டு, உலக நாடுகள் மத்தியில் சிறந்த நாடாக மாறும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளில் தலைவர்களோ, கொள்கைகளோ இல்லை. நாட்டில் எங்குமே அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.
உங்கள் முன்னால், இந்த மேடையில் இருந்து கொண்டே மம்தா பானர்ஜி, ஸ்டாலின் ஆகியோருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பீஹாரையடுத்து, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியானது, தேர்தலில் அமோகமாக வென்று பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தம். நீங்கள் அதற்கு தயாராக இருங்கள்.
2026ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும் துடைத்தெறியப்படும்.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அவரின் பேச்சைக் கேட்ட அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கரவொலி எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
Hindusthan Samachar / JANAKI RAM