Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக அரசும் காவல்துறையும் நாள்தோறும் நடந்தேறும் படுகொலைகளை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் ஏன் இதுவரை காட்டவில்லை? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இந்துக்கள் தீபம் ஏற்றுவதை தடுப்பதில் காட்டுகிற அக்கறையை,
பாஜக மற்றும் இந்து இயக்கத் தலைவர்களை கைது செய்வதில் காட்டுகிற அக்கறையை, பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் நடத்துகிற அறப்போராட்டங்களை முடக்குவதில் காட்டுகிற அக்கறையை,போதைப்பொருள் பரவலாக்கலை கட்டுப்படுத்தி அதை ஒழிப்பதிலும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடந்தேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தி பெண்களை காப்பதிலும்,
நாள்தோறும் நடந்தேறும் படுகொலைகளை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் ஏன் இதுவரை காட்டவில்லை?
பதில் சொல்லுங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களே என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ