Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 9 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏராளமான வன வன விலங்குகள் உள்ளது. இதில் யானைகள் அவ்வப் போது வனத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் தோட்டத்திற்கு புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நள்ளிரவு கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பனூர் பகுதியில் வேலுச்சாமி என்பவர் தோட்டத்தில் ஆறு யானைகள் புகுந்தன.
இந்த யானைகளை விரட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போதுமான வன ரோந்து குழு இல்லாததால், அவர்கள் வர தாமதமானது.
இந்த நிலையில் அப்பகுதியைச் சார்ந்தவர்கள் யானைகளை வன பகுதியில் விரட்டினர்.
இவரைத் தொடர்ந்து வாகனத்தில் அப்பகுதியைச் சார்ந்தவர்கள் யானைகளை ஒலி எழுப்பியும் விரட்டினர்.
யானைகள் கூட்டமாக தோட்டத்தில் இருந்து வெளியேறி வானத்தை நோக்கி ஓடியது.
யானைகள் குடியிருப்பின் உட்புறப் பகுதிகளுக்குள் வந்து இஷாவுக்கு ஏற்படுத்துவது தடுக்கப்பட்டு உள்ளது.
வனத்துறை ரோந்து சென்று கண்காணிக்க குழுக்கள் குறைவாக உள்ளது எனவும், ரோந்து குழுக்களை அதிகரித்து யானைகளை விரட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.
யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து மின்சாதன பொருட்களை உடைத்ததுடன், வேலிகளை சாய்த்தும், மரங்களை முறித்தும் சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்கு உரிய இழப்பீடுகளை வனத்துறை தரப்பில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J