Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 9 டிசம்பர் (ஹி.ச.)
கொடிசியா இன்டஸ்ட்ரியல் பார்க்கில் உருக்காலை அமைவதை தடுக்க கோரியும்,கிழக்கு புறவழிச்சாலை அமைவதை தடுக்க கோரியும் கோவை அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா அலுவலகம் அருகே விவசாயிகள் தமிழக அரசு மற்றும்
கொடிசியா அமைப்பு முதலாளிகளை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாயி பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஈசன் கூறியதாவது,
கொடிசியா முதலாளிகள் 200 முதல் 300 ஏக்கர் நிலத்தில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக மனு அளித்து வருகின்றனர்.ஆனால் அததையும் ஏற்று தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
கொடிசியா முதலாளிகளுக்கு 100 முதல் 200 ஏக்கர் நிலம் உள்ளது கோடியில் பணம் வைத்திருக்கிறார்கள் எனவும் அவர்கள் நிலத்தில் அமைக்காமல் விவசாயம் இடத்தில் தொழில்
பூங்கா அமைப்பதற்கு திட்டம் போட்டு வருவதாகவும் 5 கோடி ரூபாய்க்கு விற்க கூடிய விவசாய நிலத்தை அரசிடம் கூறி நான்கு லட்ச ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே சாலைகள் ஆக்கிரமிப்பு உள்ளது அதனை அகலப்படுத்தினாலே போதுமான சாலைகள் கிடைக்கும் அதனை விட்டுவிட்டு அரசாங்கம் மேட்டுப்பாளையம் முதல் அன்னூர் வரை நான்கு வழி சாலை திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர்.அது மட்டும் இல்லாமல் அன்னூர்,காரணம்பேட்டை, கரடிவாவி வரை ஆக்கிரமிப்பு அகற்றினாலே சாலைகள் போதும் என தெரிவித்தனர்.
கொடிசியாவில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள்,சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் முறையாக லைசென்ஸ் இல்லாமல் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.அதனை இழுத்து மூடும் போராடத்தில் விவசாயிகள் ஈடுபட போவதாக தெரிவித்தார்.
கிழக்குப் புறவழிச்சாலை திட்டத்தினால் 1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்படும் எனவும் மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள் எனவும் இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பேட்டி -
ஈசன்
நிறுவனர்
விவசாயி பாதுகாப்பு சங்கம்
---------------
Hindusthan Samachar / Durai.J