Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
அஸ்னா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி
விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்ப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்,
தயாரிப்பாளர் சையத் தமீன் பேசியதாவது.....
இங்கு என்னை வாழ்த்த வந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வஞ்சிக்கப்பட்ட தோழிக்கு நீதி வேண்டி போராடும் பெண்ணின் கதை தான் இது. இது உண்மையில் நடந்த கதை. இந்த கதையில் வரும் வில்லனுக்கு, 2017 ஆம் ஆண்டு பூந்தமல்லி கோர்டில் தண்டனை வழங்கப்பட்டது, உண்மையில் நடந்ததை வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் என்பவர் எல்லா பிஸினஸ் போல பொருளை தயாரித்து சந்தைக்கு கொண்டு வருகிறார், ஆனால் இடையில் உள்ளவர்கள் தான் சம்பாதிக்கிறார்கள், தயாரிப்பாளருக்கு இறுதியில் தான் என்ன கிடைக்கிறது என்பதே தெரிய வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தந்து புதிய தயாரிப்பாளரை வாழ வையுங்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் கௌதம் வின்செண்ட் பேசியதாவது....
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் ஊர் கேரளா ஆனால் நான் படித்தது, வேலை பார்ப்பது சென்னையில் தான், இந்தப்படத்தில் 3 பாடல்கள் உள்ளது. மூன்றும் அருமையாக வந்துள்ளது. என் மனைவி தான் இரண்டு பாடல்களில் பெண் குரலுக்கு பாடியுள்ளார். நாங்கள் எல்லோரும் புதியவர்கள் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. என்றார்.
நடிகர் சினான் பேசியதாவது.....
இயக்குநர் சந்தோஷுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. எனக்கு இது பெரிய வாய்ப்பு, எனக்கு கொடுத்த கேரக்டரை நன்றாக செய்துள்ளேன் என நம்புகிறேன், அனைவரும் படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.என்றார்.
நடிகர் பிட்டு தாமஸ் பேசியதாவது.....
நான் கேரளா தான் தமிழ் பேச கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பு எனது கனவு நனவானது போல இருக்கிறது. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். பாக்யராஜ் சார் இருக்கும் மேடையில் இருப்பது பெருமை. இது க்ரைம் திரில்லர் நல்ல படம், இது என் இரண்டாவது தமிழ்படம். நானே டப்பிங் செய்துள்ளேன் படம் பார்த்து ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை ஆஷிகா அசோகன் பேசியதாவது.....
கடவுளுக்கு நன்றி. பாக்யராஜ் சார் போன்ற ஆளுமையுடன் இந்த மேடையை பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி. இந்தப்படம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற, நடக்கிற ஒரு முக்கியமான விசயத்தை படத்தில் பேசியுள்ளார்கள். படம் முழுக்க என்னுடன் உழைத்த அனைவருக்கும் நன்றொ. படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகை ஐஸ்வர்யா பேசியதாவது.....
இரண்டு வருடமாக இந்த மேடைக்காக காத்துக்கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் சமூகத்திற்கு மிக அவசியமான விசயத்தை பேசியுள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் சந்தோஷ் ரயான் பேசியதாவது....
இந்த படத்தை தயாரித்த சையத் தமீன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த லால் தேவ் சகாயம் சாருக்கு நன்றி. சரவணன் மசூத் இருவருக்கும் நன்றி. ஆஷிகா அசோகன் மிக முக்கியமான பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோயின் ஐஸ்வர்யா எப்போது சார் படம் வரும் எனக்கேட்டுக் கொண்டே இருந்தார். சூப்பராக நடித்துள்ளார். வில்லன் நடிகர் சினான் மிக நன்றாக நடித்துள்ளார். கௌதம் எனக்காக பல கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு அருமையான இசையைத் தந்துள்ளார். சந்தீப் மிக நன்றாக எடிட் செய்துள்ளார். ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி, இது நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது நம் தனிமனித ஒழுக்கத்தால் தான் மாறும், அதை இந்தப்படம் அழுத்தமாக பேசும். பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளோம். எங்களைப் போன்ற புதியவர்களின் முயற்சிக்கு ஆதரவு தந்து தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.
இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது.....
தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்திக்கு ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள். அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.
சந்தோஷ் என்னை அழைக்கும் போது, படத்தின் அவுட்லைன் சொன்னார், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத் தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது. இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது. க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் அதிகம் கரைம் ஆக்சன் படங்கள் தான் பார்ப்பேன். முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார்.
இந்தப்படம் யார் நடித்திருக்கிறார் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நானும் இப்படம் பார்க்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் ஆடியன்ஸ் ரிவ்யூ வந்த பிறகு நன்றாக இருந்தால், படத்திற்கு போகலாம் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
எனவே பத்திரிக்கையாளர்கள் இம்மாதிரி சின்ன படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் தந்து ஆதரவு தாருங்கள் நன்றி. என்றார்.
Hindusthan Samachar / Durai.J