Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 9 டிசம்பர் (ஹி.ச.)
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இன்று, மற்றும் வருகிற 11-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி, கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை. அதே போல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வாக்குப்பதிவு செய்து விட்டு சற்று தாமதமாக வரலாம் அல்லது வேலை முடிந்து வாக்களிக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.
கேரள அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று, மற்றும் 11-ந் தேதி விடுமுறை அளித்து கேரள அரசு அறிவித்து உள்ளது.
தனியார் துறை நிறுவனங்கள், ஐ.டி. ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM