Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 9 டிசம்பர் (ஹி.ச.)
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளது. அதில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 1 வாரகாலமாக நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். இந்த நிலையில் இன்று (டிச 9) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் இந்த வாக்குபதிவானது நடைபெறுகிறது.
நாளை மறுநாள் திருச்சூரில் இருந்து காசர்கோடு வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று காலை தொடங்கியுள்ள வாக்குப்பதிவில் மக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b