Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 9 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளங்கி, கோம்பை பகுதியில் உள்ள பெப்பர் அருவிக்கு செல்வதற்கு வனப்பகுதி, ஆற்றைக் கடந்து அதன் பிறகு நடந்து செல்ல வேண்டும் இந்த இடத்திற்கு செல்வதற்கு சாகச சுற்றுலா சவாரி ஆப் ரோடு சவாரி என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்று சாகச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் நபர் ஒன்றுக்கு அதிகமாக பணம் வசூல் செய்கின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் சாகச சுற்றுலா என்ற பெயரில் ஈடுபட்ட ஜீப் களை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டு விதி மீறல்கள் கண்டறியப்பட்டு 10 ஜீப் வாகனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
Hindusthan Samachar / Durai.J