SIR மீது விவாதம் - இன்று காலை அவை தொடங்கும் முன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்
புதுடெல்லி, 9 டிசம்பர் (ஹி.ச.) பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்ச
SIR மீது விவாதம் - இன்று காலை அவை தொடங்கும் முன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்


புதுடெல்லி, 9 டிசம்பர் (ஹி.ச.)

பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் SIR குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்

இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை அவை தொடங்கும் முன் நடைபெற உள்ளது.

காலை 9. 30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM