Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டை முன்னிட்டு இந்தியா முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நடத்தி வருகிறார்.
டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில், மோகன் பகவத் பங்கேற்றார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு தூதர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர், நான்கு நாள் தமிழக பயணமாக நேற்றிரவு(டிச 09) சென்னை வந்தார்.
சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (டிச 09) நடைபெறவுள்ள இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பகவத் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 1,500 இளைஞர்கள் பதிவு செய்துள்ளதாக ஆர்.எஸ். எஸ். தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை சேத்துப்பட்டு, ஆர்.எஸ்.எஸ்.மாநில தலைமை அலுவலகத்தில் தங்கும் அவர், அமைப்பு ரீதியான கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
நாளை(டிச 10) திருச்சி செல்லும் அவர், அங்கு ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளை முடித்து, வரும் 11-ம் தேதி கொல்கட்டா செல்கிறார்.
Hindusthan Samachar / vidya.b