காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.) காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று (டிச 09) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெர
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று

(டிச 09) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (டிச 09) பதிவிட்டிருப்பதாவது,

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியை பிரதிபலிக்கிறது.

முற்போக்கான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை அவரது கொள்கை ரீதியான பாதையும் வழிகாட்டுதலும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b