Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடராமன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு இன்று (டிச 09) திடீரென்று உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது.
திடீரென நெஞ்சுவலியால் துடித்த வெங்கடராமன் உடனடியாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்போது அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Hindusthan Samachar / vidya.b