அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.) தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதிவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு


சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் விவரங்கள் வருமாறு:

தேர்வு நடத்தும் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)

பணி நிறுவனம்: தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் லிமிடெட்

காலி இடம்: 61

பதவி: அரசு உதவி வழக்கு நடத்துநர் (நிலை - 2)

கல்வி தகுதி: பி.எல். பட்டம் பெற்றிருக்க வேண்டும். வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். குற்றவியல் நீதிமன்றங்களில் குறைந்தது

ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

வயது: பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.

தேர்வு முறை: தமிழ் தகுதித் தேர்வு, முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-12-2025.

இணையதள முகவரி: https://tnpsc.gov.in/

இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b