புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் - தனியார் பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி, 9 டிசம்பர் (ஹி.ச.) புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிச 09) நடைபெற உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்  -  தனியார் பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


புதுச்சேரி, 9 டிசம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிச 09) நடைபெற உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்குள் மற்றும் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த பொது கூட்டத்திற்கு கியூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் இப்பொதுக்கூட்டம் நடைபெறும் புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் இன்று

(டிச 09) விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

Hindusthan Samachar / vidya.b