Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)
புதுச்சேரிக்கு மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் கூறிய தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பிறகு தான் புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதுவரை இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதை மாற்றி முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்தோம்.
அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்சி பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சரிசமமாக கல்வி கற்க அனைத்து அரசாங்க பள்ளிகளும் சிபிஎஸ்சி பள்ளிகளாக தரம் உயர்த்தினோம். அதே நேரத்தில் தாய்மொழி தமிழ் கட்டாயமாக்கப்பட்டு சிபிஎஸ்சி பள்ளிகளாக மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்களால் மாற்றப்பட்டது.
*கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டை விட புதுச்சேரி சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தோம்.
ரெம்டெசிவர் மருந்திற்காக தமிழ்நாட்டில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை
புதுச்சேரியில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தெலுங்கானாவில்ருந்து
சிறப்பு விமானம் மூலம் எடுத்து வந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி 98 சதவீதம் மக்களுக்கு முழுமையாக வழங்கினோம்.
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டேன்.
கொரோனா காலகட்டத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மக்களைத் தவிர புதுச்சேரி அருகில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விழுப்புரம்,கடலூர் போன்ற மாவட்டத்தைச் சேர்ந்த 40% மக்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு பயன்பெற்றனர்.
கொரோனா காலகட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு ஆக்சிஜன், கொரோனா சிகிச்சை மருந்துகளின் பற்றாக்குறை இல்லாமல் கவனித்துக் கொண்டது.
தமிழகத்தில் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் தமிழ்நாடு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் புதுச்சேரியில் பொதுமக்கள் அன்றாடம் பாதிக்காத வகையில் பகுதி நேர ஊரடங்கை உத்தரவிட்டு கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தது. அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.
புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கத்திற்காக இடம் கேட்டு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரடியாக சென்று பார்த்து புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் தருமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு இடம் தர மறுத்துவிட்டது.
மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும் புதுச்சேரிக்கு முழுமையாக சென்றடைய வைத்தோம். அதை அறியாமல் இப்படி புதுச்சேரிக்கு மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று கூறுவது சரியல்ல என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ