திருப்பரங்குன்றம் விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
மதுரை, 9 டிசம்பர் (ஹி.ச.) முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு என போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். வழக்
திருப்பரங்குன்றம் விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது


மதுரை, 9 டிசம்பர் (ஹி.ச.)

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடு என போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். வழக்கமாக இந்தக் கார்த்திகை தீபம் உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகே தான் ஏற்றப்படும்.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை கார்த்திகை தீபத்தை உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் பதிலாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், மனுதாரர் குறிப்பிட்ட இடம் தர்காவுக்கு மிக அருகே இருப்பதாகச் சொல்லி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். ஆனாலும், கார்த்திகை தீபம் நாளில் உச்சி பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அப்போது சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டதாகச் சொல்லி அன்றைய தினமும் அனுமதி மறுக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இறுதியில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை செய்வதாகக் கடந்த டிசம்பர் 4ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

டிச 4 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த ஜிஆர் சுவாமிநாதன் ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சொல்லி, தமிழக அரசு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

அதன்படி மறுநாளே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், அவசர வழக்காகவும் விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த மனு இதுவரை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (டிச 09) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ராம ரவிகுமார் தாக்கல் செய்த இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b