தமிழ்நாட்டில் நாம் தினந்தோறும் ஊழல் எதிர்ப்பு தினமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் - தவெக அருண்ராஜ்
சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.) இன்று டிசம்பர் 9 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக ஐநா அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு படி மேலே போய், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே இந்த அரசின் தாரக மந்திரமாக உள்ளது என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் எ
Arunraj


Tw


சென்னை, 9 டிசம்பர் (ஹி.ச.)

இன்று டிசம்பர் 9 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக ஐநா அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு படி மேலே போய், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே இந்த அரசின் தாரக மந்திரமாக உள்ளது என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பல்வேறு நாடுகளில் வளர்ச்சியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் மிக முக்கிய காரணியாக, ஊழல் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு படி மேலே போய், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதே இந்த அரசின் தாரக மந்திரமாக உள்ளது.

அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்களும் எதிர்கொண்டு வரும் ஊழல் வழக்குகள், அவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் ஒளிந்து கொண்டு நடத்தும் நாடகங்கள் இவற்றையெல்லாம் இன்று இளைஞர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நடக்கும் ஊழல்களில் ஓரிரு சதவீதம் கூட வழக்காகி நீதிமன்றங்களுக்கு செல்வதில்லை.

தமிழ்நாட்டில் இருந்து ஊழலை அழித்தொழிக்க வேண்டுமானால் அரசியல் மாற்றமே அதற்கு தீர்வு.

எந்த விதமான சுயநல எதிர்பார்ப்பும் இன்றி, ஏராளமான பொருளாதார பலன்களை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மக்களுக்காக போராட வந்திருக்கும் நமது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களோடு, ஊழல் எதிர்ப்புப் போரில் தமிழ்நாட்டு இளைஞர்கள் கை கோர்த்திருக்கிறார்கள்.

ஐநாவுக்கு வேண்டுமானால் ஒரே ஒரு நாள் ஊழல் எதிர்ப்பு தினமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் நாம் தினந்தோறும் ஊழல் எதிர்ப்பு தினமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

2026 சட்டமன்ற தேர்தல் நடக்கும் தினத்தையும், ஊழல் எதிர்ப்பு தினமாக்குவோம். ஊழலற்ற புதிய தமிழ்நாட்டை உருவாக்குவோம் வாரீர் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ