விஜய் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார் - வைகோ
திருப்பரங்குன்றம், 9 டிசம்பர் (ஹி.ச.) கட்சி நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: வருகி
Vaiko


திருப்பரங்குன்றம், 9 டிசம்பர் (ஹி.ச.)

கட்சி நிர்வாகி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

வருகிற ஆண்டு 2026 இல் ஜனவரி முதல் நாளன்று செய்தியாளர்களையும், தொலைக்காட்சி ஊடக நண்பர்களையும் திருச்சியில் சந்திக்கிறேன் மறுநாள் காலையில் தமிழ்நாட்டில் போதைப் பொருள் இளைஞர் சமுதாயம், மாணவர் சமுதாயம் பாழாகி போய்விடும், தமிழகம் பஞ்சாபை போல மோசமான நிலைக்கு ஆகிவிடும் என்பதால் அதை தடுக்க வலியுறுத்தி திருச்சியில் புறப்படுகின்ற சமத்துவ நடை பயணத்தை தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அந்தப் பயணத்தை வாழ்த்தி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன், விடுதலை சிறுத்தைகள் நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் வாழ்த்தி பேசுகிறார்கள். மற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் விராலிமலையில், துவரங்குறிச்சியிலும், மேலூரிலும் நடக்கின்ற கூட்டங்களில் பங்கேற்கிறார்கள். மதுரையில் ஜனவரி 12ஆம் தேதி பயணம் நிறைவு பெறுகிறது. அந்த நிறைவு நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தலைமை தாங்குகிறார்.

திருச்சியில் முதல்வர் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ வரவேற்புரையாற்றுகிறார். மூன்று மாவட்ட செயலாளர் களும் முன்னிலை வகிக்கிறார்கள் 950 பேர் என்னுடன் நடை பயணத்தில் கலந்து கொள்கிறார்கள். போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டு நடப்பார்கள். இது எனக்கு பத்தாவது நடை பயணம். இந்த நடை பயணத்தின் போது எந்த இடையூறும் போக்குவரத்துக்கு இருக்காது. எங்கள் அணி தலைவர்களே போக்குவரத்து சீர் செய்வார்கள்.

இந்த நடை பயணம் தமிழ்நாட்டில் விஷ குடியிலிருந்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாணவிகள் கூட இதற்கு அடிமையாவதை கேள்விப்பட்டிருக்கிறோம். கோவையில் ஒரு இளம் பெண் நான்கு மிருகங்களால் நாசமாக்கப்பட்டார். அந்த நான்கு பேரும் போதை பொருள் தான் அருந்தி இருந்தார்கள், மதுவை விட கொடியது இந்த போதை பொருள். மது அருந்தியர்களை கண்டுபிடித்து விடலாம் போதைப் பொருள் அருந்தியவரை கண்டுபிடிக்க முடியாது. ஆறு மாத காலமாக திட்டமிட்டு இருந்தேன். பாதிக்கப்பட்ட எனது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததால் தொடர முடியவில்லை எனவே இந்த சமத்துவ நடை பயணத்தில் நிறைய படித்த இளைஞர்கள், படிக்கின்ற இளைஞர்களை நேரடியாக கேள்விகள் கேட்டு முன்யோசனையோடு தேர்ந்தெடுத்து இந்த நடை பயணத்தில் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

அதே நேரத்தில் நடைபெற்று வரக்கூடிய நல்லாட்சியை வருகிற 2026 தேர்தலிலும் திமுக ஆட்சி அமைக்கின்ற வகையில் மக்கள் ஆதரவும் என்னுடைய நடை பயணத்தின் மூலம் உறுதியாக பதிவு செய்வேன். உறுதியாக திராவிட முன்னேற்ற கழகம் மற்ற எந்த கட்சிகள் என்ன செய்தாலும் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்கள் என்பது என்னுடைய கணிப்பு.

இப்போது திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்டிருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்சனை திட்டமிட்டு இந்துத்துவாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தத் தூணில் விளக்கு ஏற்றும் பழக்கம் இல்லை உச்சிப்பிள்ளையார் கோவிலிலேயே சுடரேற்றுவார்கள். இந்த முறை திட்டமிட்டு அவர்கள் ஏற்ற முயற்சித்ததும், அந்த முயற்சி நடக்கும் போதே துலாக்கோள் நிலையில் இருந்து மீறி நீதியை பறிப்பாளனம் செய்யக்கூடிய நீதி அரசர் இந்துத்துவவாதியை போல தன்னுடைய மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு விளக்கு ஏற்றாவிட்டால் நடப்பது வேறு என்று அச்சுறுத்துகின்ற பாணியில் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது.

நீதித்துறை, நிர்வாக துறை, சட்டமன்றம் மூன்றும் சேர்ந்த தான் ஒரு அரசு இயங்குகிறது. நீதித்துறையை சேர்ந்தவர்கள் சமீப காலமாக தனிப்பட்ட சொந்த வெறுப்புகள், சொந்த கருத்துக்களை திணிக்கின்ற முயற்சிகளை அண்மை காலத்தில் தான் அபாயம் சூல்கிறது. ஆனால் மக்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை மக்கள் ஒற்றுமையாக எடுக்கிறார்கள். இந்துக்கள் ஆகட்டும், இஸ்லாமியர்கள் ஆகட்டும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். இந்த பிரச்சனையில் அவர்கள் எந்தவித கலவர உணர்ச்சிக்கும் இடமும் கொடுக்கவில்லை. அந்த நிலைமை தான் நீடிக்க வேண்டும்.

அதேபோல திடீரென்று வந்தே மாதர கொடியை தூக்கிக்கொண்டு ஆதரவு திரட்டுகிறார்கள். பண்டித ஜவஹர்லால் நேரு அதற்கு உடன்படாததற்கு என்ன காரணம். இது பக்கிம் சந்தர் சட்டர்ஜி தான் எழுதிய ஆனந்தமடம் நாவலில் இந்த வந்தே மாதரம் கவிதையை பதிவு செய்திருந்தார்கள். அரவிந்தர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் போது தமிழ் படுத்தி போட்டிருந்தார்கள். முதல் வரிகள் பிரச்சனை இல்லை கடைசி இரண்டு வரிகள் இந்து கடவுள்களை பெயர்களை சொல்லாமல் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இன்று அவர்களை புகழ்ந்து பாடுகிற விதத்தில் தான் அமைந்திருந்தது. அதனால் தான் வந்தே மாதரத்தை அப்போது ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நேரும் அவர்களும் சொன்னார். வங்கத்து சிங்கம் நேதாஜியும் அதே கருத்தை தான் தெரிவித்தார்.

இப்போது அது பேசு பொருளாகி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ளது. புதிதாக எப்படி இந்துத்துவாவை திணிக்கலாம் என்றும், அதுவும் தமிழ்நாட்டிற்குள் எப்படி திணிப்பது என்றும் படு பேராசைப்படுகிறார்கள் எல்லா விதத்திலும். ஆனால் இது தமிழகம் மதச்சார்பற்ற தன்மைக்கு இலக்கணமான மாநிலம். இங்கு அப்படி விஷத்தை கக்கி வேறுபாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்த ஒரு காலம் முடியாது. திராவிட இயக்கத்திலே ஊறி திளைத்த பூமி பெரியார், அண்ணா L, கலைஞரால் என எண்ணற்ற தியாகிகளால் பக்குவப்படுத்தப்பட்ட மாநிலம் தான் தமிழ்நாடு. எனவே இந்த பிரச்சனைகளில் அவர்கள் இந்துத்துவா, ஆர் எஸ் எஸ் பின்னணியில் இந்தியாவை காவி மயம் பார்க்க வேண்டும் வேண்டும் என்று நினைக்கிறார்கள். உத்தர் பிரதேசம், பிஹாரில் வேண்டுமென்றால் செய்யலாமே தவிர தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அவர்கள் ஒருபோதும் ஒரு சதவீதம் கூட திணிக்க முடியாது என்பது திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

விஜய் அரசியல் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு:

அவர் சினிமா டயலாக்கை விட்டு வெளியே வரவேண்டும், அவர் பேசுவதே சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுகிறார். 41 உயிர்கள் பலியான போது, பதறி துடிக்காமல் ஒருநாள் திருச்சியில் தங்கி விட்டு, மறுநாள் அந்த உயிரற்ற சடங்களுக்கு மலர் வணக்கம் செய்துவிட்டு குடும்பத்தினருக்கு அனுதாபம் இறங்கலும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் இருக்கிறது. கடுகு அளவு பொறுப்புணர்ச்சி கூட இல்லாமல் அவர் இரவோடு இரவாக சென்னைக்கு சென்றதும். 40 நாட்கள் கழிய போகிற நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தான் இடத்திற்கு அழைத்து துக்கம் கேட்பது, இதுவரை எந்த தலைவர்களும் சாதாரண மனிதர் வரை யாராக இருந்தாலும் சொந்தமாக இருந்தால் வீட்டிற்கு சென்று தான் துக்கம் கேட்க வேண்டும். இப்படி ஒரு விசித்திரமான முறையை கொண்டு வந்து, தன்னிடத்திற்கு அழைத்து வந்து அனுதாபம் தெரிவித்து, நிதி கொடுத்தது. அவர் எடுத்து வைத்திருக்கும் புதல் அடியே பிழையாக போய்விட்டது. அவர் எங்க வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம்.

ஆனால் அந்த கூட்டத்தை பாதுகாப்பதும், நெரிசலில் பெண்கள், சிக்கிமாண்டு போனதைப் போல ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் அதை நடத்துபவர்கள் தான் பொறுப்பு. அதில் தவறி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல புதுச்சேரி என எங்கு சென்றாலும், அந்த பிரச்சாரத்தில் அவர் சொல்கின்ற கருத்தை கவனித்து பார்ப்போம் என கூறினார்.

Hindusthan Samachar / Durai.J