Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 9 டிசம்பர் (ஹி.ச.)
ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார்.
டெல்லியில் நடைபெற்ற 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கலந்து கொண்டனர். மேலும் இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சமீப காலமாக இந்தியா-அமெரிக்கா உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழலில், ரஷிய அதிபரின் இந்திய வருகை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.
புதினின் வருகையின்போது, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இல்லை என்றும், அமைதியின் பக்கம் இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து புதின் பேசுகையில், அமைதியான தீர்வை நோக்கி ரஷியா செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த சூழலில், ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
இதன்படி வரும் ஜனவரி மாதம் ஜெலன்ஸ்கி டெல்லிக்கு வர உள்ளதாகவும், அவரது பயண தேதி இந்திய-உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM