Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
தேனீ வளர்ப்பு என்பது தேன் மற்றும் பிற தேனீப் பொருட்களைப் பெறுவதற்கும், விவசாயப் பயிர்களில் மகரந்தச் சேர்க்கையை மேம்படுத்துவதற்கும் செய்யப்படும் ஒரு சிறந்த தொழிலாகும்.
நவீன அறிவியல் முறைப்படி, மரப்பெட்டிகளைப் பயன்படுத்தி எளிதாகவும், சுகாதாரமான முறையிலும் தேனீக்களை வளர்க்கலாம்.
தேனீப் பெட்டி:
நியூட்டன் அல்லது லாங்ஸ்ட்ராத் வகை மரப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில் அடிப்பலகை புழு வளர்ப்பு அறை,தேன் சேமிப்பு அறை மற்றும் மேல் மூடி ஆகியவை இருக்கும்.
தேனீக்களின் வகைகள்:
இந்தியாவில் ஏபிஸ் செரானா இண்டிகா- இந்தியத் தேனீ மற்றும் ஏபிஸ் மெல்லிஃபரா இத்தாலியத் தேனீ ஆகிய வகைகள் வளர்க்கப்படுகின்றன.
இத்தாலியத் தேனீக்கள் அதிக தேன் சேகரிக்கும் திறன் கொண்டவை.
பெட்டி வைக்கும் முறை:
பெட்டிகள் நிழலான, சுத்தமான இடங்களில் இருக்க வேண்டும்.
மழைநீர் உள்ளே செல்லாதவாறு பெட்டியை சற்று சாய்வாக வைக்க வேண்டும்.
எறும்பு,பூச்சிகள் ஏறாமல் இருக்க பெட்டியின் கால்களைத் தண்ணீரில் வைக்க வேண்டும்.
உணவு மற்றும் பராமரிப்பு:
பூக்கள் குறைவாக உள்ள மழைக்காலங்களில், தேனீக்களுக்குச் சர்க்கரை பாகு 1:1 விகிதத்தில் சர்க்கரை மற்றும் நீர் உணவாகக் கொடுக்க வேண்டும்.
மெழுகு அந்துப்பூச்சி மற்றும் வரோவா உண்ணிகள் போன்ற நோய்களிலிருந்து பெட்டிகளைப் பாதுகாக்க வேண்டும்.
தேன் அறுவடை:
தேனீக்கள் அடை முழுவதும் தேனை நிரப்பி, மெழுகினால் மூடியிருக்கும் பிரேம்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேன் பிரித்தெடுக்கும் கருவி மூலம் தேனை வெளியே எடுத்துவிட்டு, கூட்டை அழிக்காமல் மீண்டும் பெட்டியினுள் வைத்து விடலாம்.
இடமாற்றம்:
ஒரே இடத்தில் தேன் கிடைக்காது என்பதால், பூக்கள் பூக்கும் பருவத்திற்கு ஏற்ப பெட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது அதிக லாபம் தரும்.
Hindusthan Samachar / Durai.J