Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 மே (ஹி.ச)
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி தெருவில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக உள்ள பகுதி, அருகில் கல்வி நிலையங்கள் மற்றும் கோவில் இருப்பதால் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, வேதாரண்யத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதுவரை திருத்துறைப்பூண்டி அரசலடி தெருவில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
Hindusthan Samachar / P YUVARAJ