கோவை சிறுமி கொலை விரைவு விசாரணை நடத்த உத்தரவு – முதலமைச்சர் விஜய் இரங்கல்
கோவை, 23 மே (ஹி.ச.) கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க
விஜய்


கோவை, 23 மே (ஹி.ச.)

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத இத்தகைய குற்றச் செயல்கள் சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிருக்கு உயிரான குழந்தையை இழந்து துயரத்தில் வாடும் சிறுமியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து தீவிரமாகவும் விரைவாகவும் விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்றும், இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P