Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 மே (ஹி.ச)
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனிமொழி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவை - சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில வாரங்களாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், புதிய அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைவாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்புகளில் எழுந்து வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ