Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 மே (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழக அரசை விமர்சித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,
தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்” என்று கூறும் முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சரவை அமைப்பதில் காட்டிய வேகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததன் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கோவை சிறுமி கொலை சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறீர்கள் என்று முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
குற்றம் நடைபெற்ற பிறகு குற்றவாளிகளை கைது செய்வதைவிட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுப்பதே நல்ல நிர்வாகத்தின் அடையாளம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P