Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச)
பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையிலான வரவேற்பு நிகழ்வுகளை தவிர்க்குமாறு போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சாலைகளில் கூட்டமாக திரண்டு வரவேற்பு அளிப்பது, ப்ளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகள் அமைப்பது போன்ற செயல்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஏழை எளிய மக்களுக்கான எளிமையான ஆட்சியை முன்னெடுத்து வரும் கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, மாலை அணிவித்தல், பூங்கொத்து வழங்குதல், சால்வை அணிவித்தல் உள்ளிட்ட மரியாதை நிகழ்வுகளையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, ஏழை மற்றும் எளிய மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கி ஆதரவு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் சேவையே முதன்மை, எளிமையே நமது அடையாளம் என்ற வாசகத்தையும் அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ