மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்ட பொருட்கள் விநியோகம் - அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு
சென்னை, 23 மே (ஹி.ச.) பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், 2026-2027 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்
Raj


சென்னை, 23 மே (ஹி.ச.)

பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், 2026-2027 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்ட பொருட்களை பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள கல்யாணம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற ஆய்வில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் புத்தகப்பைகள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களின் விநியோக நிலையை பார்வையிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வரும் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், 2026-2027 கல்வியாண்டிற்கான அனைத்து நலத்திட்ட பொருட்களும் மாவட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்து பள்ளிகளுக்கு நேரடியாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா நலத்திட்ட பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ