Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை , 23 மே (ஹி.ச.)
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே ராஜு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தேசிய அவர் தெரிவித்ததாவது,
அமைச்சரான பிறகு சொந்தமான ராம்நாடுக்கு பயணிக்கிறேன்..
சுற்றுச்சூழல் துறையில் நிறைய மாற்றங்களை பார்க்க உள்ளீர்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையும் உள்ளது. பின் தங்கிய மாவட்டமாக தான் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைய சுற்றுலா மாற்றங்கள் ஏற்படுத்த உள்ளோம்.
பிரசித்தி பெற்ற கோயில்கள் நிறைய உள்ளது.. ராமநாதபுரம் மாவட்டத்தை மேம்படுத்த உள்ளோம்.
தண்ணீர் பிரச்சனை முழுமையாக போக்க வேண்டும்.
ராமேஸ்வரத்தில் துணிகளை கழட்டி போடுகிறார்கள், இதனை முறையாக ஆய்வு செய்து சரி செய்யப்படும் சுத்தமான தமிழ் நாடாக மக்களுக்கு தரப்படும்.
மக்கும் குப்பை மக்காத குப்பை முறையாக பிரிக்கப்படும், மஞ்சப்பை ஃபெயிலியர் இந்த முறை நடக்காது.
இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்சியாக அமையும்.
ஆறுகளில் கழிவுநீர் கலக்குவது குறித்து ஆய்வுகள் செய்ய உள்ளோம், தவறு செய்வோம் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த ஒரு பாரபட்சமும் கிடையாது நேர்மையாக நடக்கும்.. கடுமையான நடவடிக்கை இருக்கும்
எச்சரிக்கை இனிமேல் பண்ணாதீர்கள்.
உங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
வாய்மொழியாக இல்லாமல் செயல்முறையாக இருக்கும்.
என அமைச்சர் ராஜீவ் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA