திருச்செந்தூர் கோயிலில் ரூ.25 லட்சம் கட்டண சீட்டு மோசடி - பெண் பணியாளர் சிக்கினார்
சென்னை, 23 மே (ஹி.ச) திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்-இல் 100 ரூபாய் கட்டண சீட்டு விற்பனை நிலையங்களில் நடைபெற்ற ஆய்வில் ரூ.25.24 லட்சம் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது, கம்ப்யூட்டரில் உள்ள ஐ.டி.எம்.எஸ். பயனர் உ
Tem


சென்னை, 23 மே (ஹி.ச)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்-இல் 100 ரூபாய் கட்டண சீட்டு விற்பனை நிலையங்களில் நடைபெற்ற ஆய்வில் ரூ.25.24 லட்சம் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, கம்ப்யூட்டரில் உள்ள ஐ.டி.எம்.எஸ். பயனர் உள்ளிட்டை பயன்படுத்தி ஒருமுறை மட்டும் கட்டண சீட்டு நகல் எடுக்கும் வசதியை தவறாக பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், ‘சி.சி.டி.வி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், திருக்கோயில் பணியாளர் மேனகா பணியில் இருந்த நேரங்களில் மட்டும் கட்டண சீட்டு மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் ரூ.25,24,100 தொகையை முறைகேடாக கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, தினசரி கட்டண சீட்டு வசூல் அறிக்கைகளை கம்ப்யூட்டர் மூலம் சரிபார்க்காததுடன், அச்சிடப்பட்ட கட்டண சீட்டுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டியதாக திருக்கோயில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ