ராணிப்பேட்டை வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை, 23 மே (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் ஜீப் நேற்று (22-05-26) நள்ளிரவு 1 மணி அளவில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப்பார்த்து பதறிப்ப
ராணிப்பேட்டை வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை


ராணிப்பேட்டை, 23 மே (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் ஜீப் நேற்று

(22-05-26) நள்ளிரவு 1 மணி அளவில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதைப்பார்த்து பதறிப்போன அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் இரவு காவலாளி பதற்றமும் அதிர்ச்சியும் அடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர்.

ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஜீப்பை தண்ணீர் பீச்சி தீயை அனைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் நடராஜன் கொண்ட குழுவினர் உடனடியாக இதுக்குறித்து காவல் நிலையத்தில் புகார் தந்தனர்.

இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு காரை மர்ம நபர்கள் யாரோ தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது என்கிறார்கள். அது யார் என தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர்.

நேற்று காலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மாந்திரீகம் செய்ததற்கான அடையாளம் இருந்தது. மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளையும் ஊழியர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.

இதனை தொடர்ந்து அரசு அதிகாரியின் ஜீப் தீ பற்றி எரிந்து இருப்பது ஊழியர்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b