Enter your Email Address to subscribe to our newsletters

சூலூர், 24 மே (ஹி.ச)
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
சிறுமி படுகொலை சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து, குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சூலூர் பேருந்து நிலையம் முன்பு இன்று மாலை 4:00 மணியளவில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள உள்ளனர்.
கோவையில் நடந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கோரியும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b