இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்! - எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
சென்னை, 09 ஜூன் (ஹி.ச.) பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களின் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்கும் மத்திய அரசின் சமூக நலத் திட்டமாகும். 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
Allegation by MP Manickam Tagore


சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களின் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளை வழங்கும் மத்திய அரசின் சமூக நலத் திட்டமாகும்.

2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், கிராமப்புற மற்றும் நலிவடைந்த பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை முதன்மையாகக் கொண்டுள்ளது.

இலவச இணைப்பு கிடைத்தாலும், ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்குவதற்குத் தேவையான முழுப்பணத்தைச் செலுத்துவது அடித்தட்டு மக்களுக்குக் கடுமையான நிதிச் சுமையாக உள்ளதாக இத்திட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இத்திட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

ஏழை பெண்களுக்கு மோடி பரிசு..

உஜவாலா திட்டம் பாஜகவினர் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது.

2016: 12 சிலிண்டர்கள் மனியம்

கடந்த ஆண்டு: 9 சிலிண்டர்களாக குறைப்பு

இன்று: வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைப்பு!

ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது!

“சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது — உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் குறைவக பயன்படுத்துகின்றனர்,

தேவை இல்லாததால் அல்ல

இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b