உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் - அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி
விசாகப்பட்டினம் , 09 ஜூன் (ஹி.ச.) விசாகம் ஸ்டீல் பிளான்ட் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களை ஆந்திர மாநில ஐடி, கல்வித் துறை அமைச்சர் நாரா லோகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விசாகம் கிங் ஜார்ஜ் மருத்துவமனை (KGH)க்கு சென்ற அவர்,
A


விசாகப்பட்டினம் , 09 ஜூன் (ஹி.ச.)

விசாகம் ஸ்டீல் பிளான்ட் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களை ஆந்திர மாநில ஐடி, கல்வித் துறை அமைச்சர் நாரா லோகேஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விசாகம் கிங் ஜார்ஜ் மருத்துவமனை (KGH)க்கு சென்ற அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

அப்போது அவருடன் மத்திய இரும்பு மற்றும் எஃகு துறை இணை அமைச்சர் பூபதிஜு ஸ்ரீனிவாச வர்மா, மாநில உள்துறை அமைச்சர் வங்கலபூடி அனிதா, அமைச்சர் சந்த்யாராணி, எம்.பி. ஸ்ரீபரத் மற்றும் பலர் உடனிருந்தனர்.

பின்னர்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாரா லோகேஷ் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய, மாநில NDA அரசுகள் முழுமையான ஆதரவு அளிக்கும். அவர்களுக்கு அனைத்து வகையிலும் அரசு துணையாக இருக்கும்.

விபத்து குறித்து அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வந்த பிறகு, பொறுப்புள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஸ்டீல் பிளான்டை காப்பாற்ற பொதுமக்கள் அனைவரும் இணைந்து போராடியதால்தான் அது பாதுகாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் பூபதிஜு ஸ்ரீனிவாச வர்மாவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA