விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை விபத்து – ரூ.1.72 கோடி நிதி உதவி பவன் கல்யாண் அறிவிப்பு
விசாகப்பட்டினம், 09 ஜூன் (ஹி.ச.) விசாகப்பட்டினத்தில் உள்ள விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை-ல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் பெரும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விபத
A


விசாகப்பட்டினம், 09 ஜூன் (ஹி.ச.)

விசாகப்பட்டினத்தில் உள்ள விசாகப்பட்டினம் ஸ்டீல்

ஆலை-ல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் பெரும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் கிம்ஸ் மருத்துவமனையில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் ஆலை பகுதிக்கும் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விபத்தில் உயிரிழந்த நிரந்தர ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.72 கோடி, ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.45.75 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு உடனடி நிதி உதவியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், முழு மருத்துவ செலவையும் அரசு ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விபத்து காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் பிரச்சனைகள் குறித்து விரைவில் தனி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் உறுதியளித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA