இஸ்ரேல் மீதான தாக்குதல் நிறுத்தம் - ஈரான் ராணுவ தலைமையகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈரான், 09 ஜூன் (ஹி.ச.) லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்திவந்ததால், இஸ்ரேல் விமான தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்ட
இஸ்ரேல் மீதான தாக்குதல் நிறுத்தம் -  ஈரான் ராணுவ தலைமையகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ஈரான், 09 ஜூன் (ஹி.ச.)

லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்திவந்ததால், இஸ்ரேல் விமான தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்டும் தீவிர போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது மேற்கொண்டு வந்த ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படுவதாக ஈரானின் ராணுவ தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாகவும், லெபனான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் பட்சத்தில், இதுவரை அளித்ததை விட மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியிருந்தாலும், லெபனான் மீதான ஆக்கிரமிப்பு நீடித்தால் தீவிரமான ராணுவ பதிலடிக்கு தயாராக இருப்பதாக ஈரானின் ராணுவ தலைமையகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் சூழலுக்கு மத்தியில் ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / vidya.b