திரிபுரா அரசு அலுவலக நேரங்கள் மாற்றம் - இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அறிவிப்பு
திரிபுரா, 09 ஜூன் (ஹி.ச.) திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா மாநில அரசு ஊழியர்களுக்கான பணி நேரத்தை மாற்றியமைத்து, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளார். திருத்தப்பட்ட புதிய பணி நேரம் காலை 9:30 மணி மு
திரிபுரா அரசு அலுவலக நேரங்கள் மாற்றம் - இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அறிவிப்பு


திரிபுரா, 09 ஜூன் (ஹி.ச.)

திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா மாநில அரசு ஊழியர்களுக்கான பணி நேரத்தை மாற்றியமைத்து, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட புதிய பணி நேரம் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருந்தது.

இதுவரை இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட்டாலும், வார நாட்களில் கூடுதல் பணி நேரம் மூலம் அது ஈடுசெய்யப்படும் என்பதால், பொதுச் சேவைகள் மற்றும் நிர்வாக செயல்திறனில் எந்த பாதிப்பும் இருக்காது என அரசு தெரிவித்துள்ளது.

பணி-வாழ்க்கை சமநிலையை உறுதி செய்யும் அதே வேளையில் உற்பத்தித்திறனையும் பேணும் நோக்கில் இந்த நிர்வாக சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட அட்டவணை ஊழியர்களின் நலன், குடும்பத்துடனான நேரம், தனிநபர் மேம்பாடு, மனநல மேம்பாடு ஆகியவற்றுடன் அரசு செயல்பாடுகளில் பொறுப்புடைமையையும் ஊக்குவிக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

நிர்வாக செயல்திறனையும் ஊழியர் நலனையும் சமநிலைப்படுத்தும் திரிபுராவின் வளர்ந்து வரும் ஆட்சி அணுகுமுறையின் அடையாளமாக இந்த சீர்திருத்தம் பார்க்கப்படுகிறது.

ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் நடைமுறை கொள்கைகள் மூலம் அரசு இயந்திரத்தை நவீனமயமாக்கும் வகையில் முதல்வர் டாக்டர் மாணிக் சாஹாவின் இம்முயற்சி இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அரசு ஊழியர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புதிய பணி மாதிரி, பொதுத்துறையில் உற்பத்தித்திறனைப் பேணும் அதே வேளையில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b