முதலமைச்சர் விஜயை இன்று நேரில் சந்தித்து பேசுகிறார் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு, 09 ஜூன் (ஹி.ச.) கடந்த 5 ஆம் தேதி பாமக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை, தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சாதிவ
அன்பு விஜய்


தமிழ்நாடு, 09 ஜூன் (ஹி.ச.)

கடந்த 5 ஆம் தேதி பாமக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் தேவை குறித்தான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுதொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து நேரில் வலியுறுத்த உள்ளதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்திக்க உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடமாறு கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P