Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 ஜூன் (ஹி.ச)
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை அடுத்து, இந்திய குடிமக்கள் அவசியமின்றி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. தற்போதைய பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு இந்த முக்கிய அறிவுறுத்தலை தூதரகம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேவையற்ற பயணங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவி தேவைப்படும் இந்தியர்களுக்காக தூதரகம் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்களை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் +972-54-7520711 மற்றும் 972-54-2428378 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தூதரகத்தின் உதவியை நாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் தொடரும் நிச்சயமற்ற சூழல் காரணமாக, இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b