Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
அந்த வகையில் நேற்று ஜூன் 8ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,070க்கும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக மாத தொடக்கத்தில் இருந்தே சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி இன்று ( ஜூன் 9) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும் சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,920க்கும் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P