முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கை ஏ அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா ஏ பேட்டிங் தேர்வு
தம்புள்ளை , 09 ஜூன் (ஜி.ச.) இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. தம்புள்ளையில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும
A


தம்புள்ளை , 09 ஜூன் (ஜி.ச.)

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

தம்புள்ளையில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து இலங்கை ஏ அணி முதலில் பந்துவீசுகிறது.

இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்கேற்றுள்ளன.

ஜூன் 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அனைத்து போட்டிகளும் தம்புள்ளையிலேயே நடைபெறுகின்றன.

இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் முக்கிய மேடையாக இந்த தொடர் கருதப்படுகிறது.

எதிர்காலத்தில் தேசிய அணிக்கான தேர்வில் இந்த தொடரின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் நட்சத்திரங்கள் நிறைந்த இந்தியா ஏ அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

அதேநேரத்தில் சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை ஏ அணியும் கடும் சவால் அளிக்க தயாராக இருப்பதால் தொடக்க ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA