Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 ஜூன் (ஹி.ச.)
ஜூன் 3-ஆம் தேதி புதுடெல்லி மால்வியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அயோத்தி காவல்துறையினர் 20 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு, குறைபாடுகள் காணப்பட்ட இடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை தீயணைப்பு அதிகாரி மகேந்திர பிரதாப் சிங் கூறுகையில்,
டெல்லி மால்வியா நகரில் உள்ள ஹோட்டலில் நிகழ்ந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் ஆய்வு நடத்தி, அங்கு காணப்படும் குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என எங்கள் டிஜி சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.
அயோத்தியில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இதுவரை 20 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை ஆய்வு செய்துள்ளோம்.
குறைபாடுகள் காணப்பட்டவற்றுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b